விஜய்யின் இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? பிரபல நடிகருடன் நேருக்கு நேர் பார்வை! உங்க மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது!

Vijay Simbu Photo
By Balakumar Dec 31, 2020 02:14 PM GMT
Report

விஜய்யின் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் 100 சதவீதம் இருக்கைகள் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுமா என பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால் விஜய்யோ தமிழகம், கேரள முதல்வர்களுக்கு மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மாஸ்டர் படம் ஜனவரி 13 ல் வெளியாவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை தொடர்ந்து பொங்கல் ஸ்பெஷலாக சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14 ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் #Master க்கும் #Eeswaran க்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே என பதிவிட்டுள்ளார்.

மேலும் சிம்பு விஜய் இருவரும் பல வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருகருகே அமர்ந்து நேருக்கு நேர் முகத்தை பார்க்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US