விஜய் இல்லை.. துப்பாக்கி படத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்டது இவர் தானாம்
விஜய்
விஜய் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் ஒன்று துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யூ ஜம்மால், அக்ஷாரா கௌடா, ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கியது. துப்பாக்கி படம் இப்போது திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆனாலும் முதல்முறை பார்ப்பது போல் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
இவ்வாறு விஜய் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக வலம் வந்த துப்பாக்கி படத்தில் முதலில் விஜய் ரோலில் நடிக்கவிருந்தது அவர் இல்லை என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி
அதில், " பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாரிடம்தான் துப்பாக்கி படத்தின் கதையை முதலில் கூறினேன். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போனதால் சரி என்று கூறினார்.
பின்னர் அவர் அங்கு தொடர்ந்து படங்கள் நடித்து வந்ததால் துப்பாக்கி படம் எடுக்க தாமதமானது. அந்த நேரத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் எனக்கு போன் செய்து, மணிரத்னம் சார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார்.
ஆனால், சில காரணத்தால் அது கைவிடப்பட்டது. உங்களிடம் கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
உடனே நான் அக்சய் குமாருக்கு போன் செய்து, சார் படம் தாமதமாகிறது அதனால் முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்றேன் அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்" என்று கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
