தளபதி விஜய் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுதான்
நடிகர் விஜய் கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்தாலும் எந்த நடிகரின் படம் வந்து அது நல்ல வரவேற்பை பெற்றால் அந்த படம் சார்ந்தவர்களை போனில் அழைத்து பாராட்ட தயங்குவதில்லை. அவர் மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை அழைத்து விருந்து வைத்தார் என்று கூட நாம் கேட்டிருப்போம்.
மேலும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் விரும்பி பார்க்கிறாராம். அவர் பிக் பாஸ் ஷோவை பார்ப்பதாக அவரது நண்பர் சஞ்சீவ் ஷோவில் கூறி இருந்தார்.
இந்நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை குக் வித் கோமாளி புகழ் நடிகை சிவாங்கி சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவையும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார் அவர்.
அப்போது தான் குக் வித் கோமாளியை விரும்பி பார்த்து வருவதாக கூறி இருக்கிறார் விஜய்.
