விஜய் சூப்பர்ஸ்டார் ஆவர் என்று 1997ல் கூறிய மூத்த நடிகர்.. இப்போ அவருடன் படத்தில் நடிக்கிறார் தளபதி
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சரத்குமார் புகழாரம்
இந்நிலையில், திரையுலகில் மூத்த நடிகரான சரத்குமார் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், விஜய் குறித்து பேசியுள்ளார்.
இதில் " விஜய் சூப்பர் ஸ்டார் ஆவர் என்று நான் சூர்யவம்சம் பட விழாவில் கூறியிருந்தேன். இப்போது அவர் அந்த அந்தஸ்தில் இருக்கிறார் " என்று கூறியுள்ளார்.

மேலும், அதே பேட்டியில் அவரது மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் " விஜய் வேற லெவல் " என்று கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri