ரஜினியுடன் விஜய் சிறு வயதில் எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
ரஜினி - விஜய்
ரஜினியை பார்த்து வியந்து சினிமாவிற்கு வந்தவர்களில் ஒருவர் தளபதி விஜய். அண்ணாமலை படத்தின் நீளமான வசனத்தை தனது தந்தையிடம் பேசி காட்டி, படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தொடர்ந்து தனது பல திரைப்படங்களில் தான் ரஜினியின் ரசிகன் என்பதை கூறியுள்ளார். ஆனால், சமீபகாலமாக இருவருக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
காக்கா கழுகு போன்ற கதைகள் மூலம் ரசிகர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது. ஆனால், அதன்பின் எனக்கும் விஜய்க்கும் போட்டி என கூறுவது மனதிற்கு வேதனையாக இருக்கிறது என ரஜினிகாந்த் கூறியபின் இந்த மோதல் ஓரளவு குறைந்தது.
ரஜினியுடன் விஜய்
விஜய்யை சிறு வயதில் இருந்தே ரஜினிகாந்துக்கு தெரியும். இந்த நிலையில், ரஜினிகாந்த் சிறு வயது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
