இதுவரை பார்க்காத விஜய்யின் கதாபாத்திரம் ! - காத்திருக்கும் மாநாடு இயக்குனர்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தொடர்ந்து பல முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை முடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் இதுவரை இணைந்ததில்ல, மேலும் மாநாடு கதையை முதலில் விஜய்யிடம் வெங்கட் பிரபு சொன்னதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே பேட்டி ஒன்றை அளித்துள்ள வெங்கட் பிரபு விஜய்யுடன் பணிபுரிவது குறித்து பேசியுள்ளார். "எப்படியாவது விஜய்யின் படத்தை நான் இயக்க வேண்டும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறோம்.
விஜய் சாருடன் இணைந்து அவர் இதுவரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சீக்கரமே நல்ல விஷயங்கள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.