தளபதி விஜய் சொன்ன வார்த்தை.. இமான் அண்ணாச்சி வாழ்க்கையையே மாற்றிவிட்டதாம்
சின்னத்திரையில் குழந்தைகள் நிகழ்ச்சிகளில் காமெடியாக பேசி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இமான் அண்ணாச்சி.
தற்போது படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் அவர். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் அவர்.

விஜய் சொன்ன வார்த்தை..
இமான் அண்ணாச்சி ஆரம்பகாலத்தில் விஜய் உடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்தாராம். அப்போது விஜய் அவரது நடிப்பு திறமையை பாராட்டி பேசினாராம்.
250 பேர் இருந்த அந்த காட்சியில் இமான் அண்ணாச்சி நடிப்பை பார்த்துவிட்டு அழைத்து பேசி இருக்கிறார் விஜய்.
இதற்கு முன் படத்தில் நடித்திருக்கிறீர்களா என கேட்டாராம் விஜய், இல்லை என சொன்னதும் 'உங்களுக்கு நல்ல நடிப்பு திறமை இருக்கிறது. பெரிய ஆளா வருவீங்க' என சொன்னாராம்.
அந்த பாராட்டு தான் தனது வாழ்க்கையை மாற்றியது என இமான் அண்ணாச்சி கூறி இருக்கிறார்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri