மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது ஏன், குழந்தைகளின் நிலை?- முதன்முறையாக கூறிய விஜய் யேசுதாஸ்
விஜய் யேசுதாஸ்
பிரபலங்களின் திருமண செய்தி வரும்போது ரசிகர்கள் எந்த அளவிற்கு சந்தோஷப்படுகிறார்களோ அதே அளவிற்கு அவர்கள் பிரியும் போது வருத்தம் அடைகிறார்கள்.
அப்படி நாக சைத்தன்யா-சமந்தா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி, ஜெயம் ரவி-ஆர்த்தி போன்றவர்களின் விவாகரத்து செய்தி கேட்ட போது ரசிகர்களே மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.

பிரம்மாண்டமான ஜீ தமிழின் சரிகமப 4 சீசன் Grand Finale... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா, சூப்பர் போங்க
விஜய் யேசுதாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல பாடகரான விஜய் யேசுதாஸும் தனது மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து குறித்த முடிவை எடுத்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் வேதனையான முடிவு இது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை பெற்றோர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இது அவர்களுக்கு ஒரு வேதனையான விஷயமாக உள்ளது. எனது மகளுக்கு 15 வயது ஆகிறது, அவரால் ஓரளவு எங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் என் மகனுக்கு 9 வயது மட்டுமே ஆகிறது, அவனுக்கு இதைப்பற்றி சொல்லி புரிய வைக்க முடியாது, புரிந்துகொள்ளும் வயதும் அவனுக்கு இல்லை, இதை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகும் என கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
