யூத் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த இந்த நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா... இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வந்த விஜய், தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் தனது சினிமாவில் இருந்தும் விலகி இருக்கிறார்.
ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
யூத் பட நடிகை
விஜய்யின் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யூத். இப்படத்தை இயக்குநர் வின்சண்ட் செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாஹீன் கான் என்பவர் நடிக்க விவேக், மணிவண்ணன், யுகேந்திரன், விஜயகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கதாநாயகியாக நடித்திருந்த நடிகை ஷாஹீன் கான், யூத் திரைப்படத்திற்கு பின் சினிமாவில் இருந்தே மொத்தமாக விலகியுள்ளார். அதன்பின் அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ஷாஹீன் கானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட யூத் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகையா இது? ஆளே மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படங்கள்:

