தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
மனோஜின் மனைவி ரோகிணி வீட்டை விட்டு வெளியேறி தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. நீது செய்யும் பிரச்சனைகள் காரணமாக ஸ்ருதி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். தன்னிடம் நீது மன்னிப்பு கேட்டால்தான் மீண்டும் வீட்டிற்கு வருவேன் என்றும் கூறிவிட்டார். சாமியார் பேச்சை கேட்டு மீனாவை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார் விஜயா. மூன்று மருமகள்களும் தற்போது வீட்டில் இல்லை.

மீனா தனது அம்மா வீட்டில் இருக்கும் நிலையில், முத்து ஒரு நாள் மட்டும் அங்கு போய் தங்கி விட்டார். ரவி தனது நண்பரோடு இன்று இரவு தங்கி கொள்கிறேன் என கூறிவிட்டார். மேலும் மனோஜ் தனக்கு வேலை இருக்கிறது இன்று இரவு வீட்டிற்கு வரமாட்டேன் என கூற, விஜயா - அண்ணாமலை இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர். இந்த சமயத்தில் அண்ணாமலை நண்பர் வீட்டிற்கு வர, இருவரும் வீட்டின் மொட்டைமாடியில் தூங்க சென்றுவிட்டனர்.
வருத்தத்தில் விஜயா.. மனம் மாறுவாரா!
இந்த நிலையில், வீட்டில் யாருமே இல்லை, நாம் மட்டும் தனியாக இருக்கிறோம் என தனிமையை உணர்ந்த விஜயா கடும் சோகத்தில் ஆழ்ந்தார்.

இதன்பின், தனது தோழி பார்வதி வீட்டிற்கு சென்றுள்ள விஜயா, அங்கு "தனிமை மிகவும் கொடுமையானது, என்னால் ஒரு நாள் கூட தனிமையில் இருக்க முடியவில்லை, நீ எப்படி இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்தாய்" என வருத்தத்துடன் பேசுகிறார். விஜயாவின் இந்த வருத்தம் அவரின் மனதை மாற்றி, மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.