ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..
நட்சத்திர விழா
நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த்.
நடிகர் சங்க தலைவராக இருந்த அவர் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரகள் அனைவரும் புறப்பட்டு நட்சத்திர விழாவிற்கு சென்றனர்.
விழாவில் கலந்துகொள்ளாத அஜித்
ஆனால், அஜித் மட்டும் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. நட்சத்திர விழா முடிந்த நினைத்தது போல் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதன்பின், நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நடிகர் சங்கத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட தொகை ஒன்றை அஜித் கொடுள்ளார்.

நட்சத்திர விழாவிற்கு அஜித் வராததால் கடும் கோபத்தில் இருந்த விஜயகாந்த், அஜித் கொடுத்த பணத்தை முதலில் வாங்கவில்லை. 'ஒன்னோட காசு எனக்கு வேண்டாம். நாங்க நினைத்ததை விட அதிகமாக கிடைத்துவிட்டது' என கூறி அஜித் கொடுத்த காசை மறுத்துள்ளார் கேப்டன்.
கண்கலங்கி அழுத விஜயகாந்த்
அஜித் எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் விஜயகாந்த் மனம் இறங்க வில்லை. இதனால் விஜயகாந்திடம் தனது முதுகில் இருக்கும் காயங்களை காட்டி இதுதான் காரணம் என கூறியுள்ளார் அஜித்.

அவருடைய முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன், அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியின் காரணமாக தான் நட்சத்திர விழாவிற்கு வரமுடியவில்லை என தெரிந்ததும் கேப்டன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம். இதன்பின் அஜித் கொடுத்த அந்த பணத்தை மனசார ஏற்றுக்கொண்டாராம் கேப்டன்.
you May Like This Video
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri