அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே.. நடிகர் விஜயகாந்த் ஆரம்பகாலத்தில் சந்தித்த அவமானம்
நடிகர் விஜயகாந்த் இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். அவரது மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
அவரது உடலுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பட்ட அவமானம்
விஜயகாந்த்தின் உண்மையான பெயர் விஜய்ராஜ். அவர் ஆரம்பகாலத்தில் பல்வேறு அவமானங்களை சினிமா துறையில் சந்தித்து இருக்கிறார்.
"நான் விளம்பரங்களில் நடித்தபோது என நிஜ பெயர் விஜய்ராஜ் தான் பயன்படுத்தினேன். அதே பெயரில் இன்னொரு நடிகர் இருக்கிறார் என்பதால் 'இனிக்கும் இளமை' பட இயக்குனர் காஜா என் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்."
"அந்த பெயர் உடன் பல இயக்குனர்களை சந்தித்த போது அவர்கள் கேட்ட ஒரே கேள்வி 'அதான் ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்காரே..நீ எதுக்கு இன்னொரு விஜயகாந்த்'. அப்படி அவமானப்படுத்தியவர்கள் பலரும் அதன் பின் என்னை வைத்து படம் எடுத்தார்கள்" என விஜயகாந்தே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
