மறைந்த நடிகர் விஜயகாந்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
விஜயகாந்த் மறைவு
கேப்டன் விஜயகாந்த் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் தற்போது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. நாளை கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் தாய், தந்தை
இந்நிலையில் 71வயதில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில் தனது தாய் மற்றும் சகோதரருடன் இருக்கிறார் விஜயகாந்த்.
மற்றொரு புகைப்படத்தில் தனது தந்தைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். விஜயகாந்தின் தாய், தந்தையின் புகைப்படங்கள் இதுவரை வெளிவராத நிலையில், அவருடைய மரணத்திற்கு பின் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
தாய் மற்றும் சகோதரருடன்
தந்தையின் புகைப்படம்