விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு- மருத்துவமனை சென்ற பிரபலங்கள்
நடிகர் விஜயகாந்த்
கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்து வருகிறது.
மிகவும் கம்பீரமாக அரசியல் மற்றும் சினிமாவில் சாதித்த இவர் உடல்நிலை சரியாகி மீண்டும் நல்லபடியாக வலம் வர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் ஆசைப்பட்டார்கள்.
ஆனால் அது நடக்கவில்லை. வீட்டிலேயே முடங்கி இருந்தார், விசேஷ நாட்களில் மட்டுமே விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகும்.

நடிகரின் உடல்நிலை
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளதாம்.
விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
அதோடு நடிகர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.

6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri