தனுஷ் குடும்பத்துக்கு விஜயகாந்த் செய்த பெரிய உதவி! மிகப்பெரிய நன்றிக்கடன்
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது அப்பா கஸ்தூரி ராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் இயக்கியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த்து தான்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பலருக்கும் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். அதை கூறி தற்போது பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் குடும்பத்துக்கு விஜயகாந்த் செய்த உதவி
தனுஷின் அக்கா கார்த்திகா தேவி +2 முடித்துவிட்டு மருத்துவம் படிக்க நினைத்தாராம், ஆனால் கட் ஆப் 1 மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்து பணம் கட்டி படிக்க வைக்க முடியாது என்பதால் மருத்துவர் ஆகும் கனவை விட்டுவிடும்படி கஸ்தூரி ராஜா கூறிவிட்டாராம்.
அதற்கு முன் கஸ்தூரி ராஜா விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போது இருந்து குடும்பத்திற்கு நெருக்கமாகிவிட்டார் அவர். அந்த நாளில் விஜயகாந்த் அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். தனுஷின் அக்கா கார்த்திகா தேவி அழுதுகொண்டிருப்பதை பார்த்து என்ன ஆனது என கேட்டாராம்.
விஷயத்தை சொன்னதும், உடனே கிளம்பிய கேப்டன் நேராக போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் பேசி மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் போனாராம்.
தனுஷின் அக்காவை டாக்டர் ஆக்க அந்த நாள் முழுவதும் அவர்கள் உடனேயே இருந்து சீட் உறுதியான பிறகு தான் கிளம்பி சென்றாராம் விஜயகாந்த்.