நடிகர் விஜயகாந்த் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
உடல்நல குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வரும் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் கூறியபோது நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிப்பார் அல்லது அவருடைய குரலாவது படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், திரையுலக சேர்ந்த முக்கிய இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ரவிமரியா ஆகியோர் விஜயகாந்தை நேரில் பார்த்து அவரது உடல்நலம் பற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..