விஜய் எல்லாம் கேட்கவே இல்லை சார்- உண்மையை உடைத்த விஜயகாந்த் மேனஜேர்
விஜயகாந்த்
விஜயகாந்த் இருந்த போது கொண்டாடாத சமூகம் அவர் மறைவுக்கு பின் அவருக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிறது.
கேப்டன் நன்றாக இருந்த போது அவரின் நல்ல மனதை கவனித்திருந்தால் சிறந்த கலைஞன், நல்ல அரசியல் தலைவர் கிடைத்திருப்பார், ஆனால் நாம் அவரை இழந்துவிட்டோம்.
கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை உயிரிழந்த அவரது உடல் டிசம்பர் 29ம் தேதி அரசின் முழு மரியாதையுடன் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
அவரை கடைசியாக காண பல லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம் கூடியது, ஆனால் எல்லோராலும் பார்க்க முடியவில்லை. தற்போது அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்களின் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நடிகரின் மேனேஜர்
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்க விஜயகாந்த்தும் ஒரு காரணம் அது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், விஜய் கடைசி வரை விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இருக்கும் போதும் பார்க்க வரவில்லை என ஒரு கோபம் ரசிகர்களிடம் இருந்தது.
ஆனால், விஜய் கேட்டும் அவர்கள் குடும்பம் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதை விஜயகாந்த் அவர்களுடைய மேனஜேர் கடுமையாக எதிர்த்துள்ளார், எல்லோருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.
விஜய் கேட்டும் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதோ அவரது பேட்டி,