நடிகர் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?..இதை படிங்க
தமிழ் சினிமாவில் 70-களில் தொடங்கி 90-களின் இறுதிவரை முன்னனி கதாநாயகர்களுக்கு இணையாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த்.
1979-ல் வெளியான இனிக்கும் இளமை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் தன் பயணத்தை தொடங்கி புரட்சி கலைஞர் என்னும் அடைமொழி பெறும் அளவிற்கு உயர்ந்தார்.
இதுவரை 100-ற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவர் தனது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படம் மூலம் தான் கேப்டன் என்று அழைக்கப்பட்டார்.
அதன் பின் 2005-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு மக்கள் தொண்டாற்ற தொடங்கினார்.
இவர் கடைசியாக 2015-ல் அருண் பொன்னம்பலம் இயக்கியிருந்த தமிழன் என்று சொல் படத்தில் தனது மகன் சண்முக பாண்டியனுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்தின் சொத்துமதிப்பு குறித்த செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி விஜயகாந்தின் மொத்த சொத்துமதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது.