நடிகர் விஜயகாந்தின் உண்மையான பெயர் இதுதான்.. என்ன தெரியுமா
நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதர் என்றும் மக்கள் மத்தியில் பேரெடுத்தவர், விஜயகாந்த்.
இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி, அரசியல் கட்சியை துவங்கினார்.
அரசியல் கட்சி துவங்கிய பிறகும், சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜயகாந்தால், திடீரென உடல்நல குறைவு காரணமாக நடிக்கமுடியாமல் போனது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் விஜயகாந்த் நடிக்க வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் குறித்து உண்மை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், நடிகர் விஜயகாந்தின் உண்மையான பெயர் நாராயணன் தானாம். நாராயணன் என்பது அவருடைய தாத்தாவின் பெயராம். மேலும், வீட்டில் விஜயராஜ் என்று தான் அழைப்பார்களாம்.
சினிமாவிற்காக தனது பெயரை விஜயகாந்த் என்று அவர் மாற்றிக்கொண்டதாக தெரியவந்துள்ளது.