விஜயகாந்தின் பரிதாப நிலையை கண்டு கலங்கும் ரசிகர்கள்! இனியும் அரசியல் செய்ய வேண்டுமா என இயக்குநர் கேள்வி
கேப்டன் விஜயகாந்த்
80ஸ், 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அரசியலில் களம்புங்குந்த விஜயகாந்த், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
மேலும் அவர் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் பரவின. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் சுந்திர தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் அவரின் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தேசிய கொடியை ஏற்ற வந்துள்ளார். அங்கு அவர் அமர்ந்தபடியே கொடியை ஏற்றியிருக்கிறார்.
கலங்க வைத்த வீடியோ
• Paavam Avara Vituduga Pls ? pic.twitter.com/pL5tkC9P53
— Rolex Hari™ (@Hari_Socialist) August 15, 2022
மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தவறிய தனது முக கண்ணாடியை மாட்ட கூட இயலாத அளவு காணப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ டிவிட்டரில் பரவி வருகிறது, அதற்கு ரசிகர்கள பலரும் அவரின் முடியாத நிலையை கண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இயக்குநர் ஜான் மகேந்திரன் “மனதிற்கு கஷ்டமாக உள்ளது...இப்படி இவரை துன்புறுத்தி, அரசியல் செய்ய வேண்டுமா...அவர் இளைப்பாற விடுங்கள்...” என பதிவிட்டு இருக்கிறார்.
மனதிற்கு கஷ்டமாக உள்ளது...இப்படி இவரை துன்புறுத்தி, அரசியல் செய்ய வேண்டுமா...அவர் இளைப்பாற விடுங்கள்...
— John Mahendran (@Johnroshan) August 16, 2022
சமந்தா - சித்தார்த் இடையேயான காதல்

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க! IBC Tamilnadu
