கேப்டனின் சினிமா பயணம்.. விஜயகாந்த் கைகொடுத்து தூக்கிவிட்டு பிரபலங்களும், சாதனைகளும்..

By Kathick Dec 28, 2023 11:00 AM GMT
Report

விஜயகாந்த்

திரை உலகின் பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த்(71) உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1979ல் வெளிவந்த இனிக்கும் இளமை என்ற திரைப்படம் தான் இவருடைய முதல் படம் ஆகும்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு..

மறைந்த நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு..

சாதனைகள்

இவருடைய 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 155 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 20 திரைபடங்களுக்கு மேல் காவல் துறை அதிகாரியாக நடித்து சாதனை படைத்துள்ளார்.

கேப்டனின் சினிமா பயணம்.. விஜயகாந்த் கைகொடுத்து தூக்கிவிட்டு பிரபலங்களும், சாதனைகளும்.. | Vijayakanth Records In Tamil Cinema

தமிழ் திரை உலகில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் விஜய்காந்த் அவர்கள் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இதில் கலைமாமணி மற்றும் கௌரவ டாக்டர் பட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.

இதனைதொடர்ந்து, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா போன்ற எட்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும், 2010ல் வெளியான விருதகிரி திரைப்படத்தை வெளியிட்டதும் கேப்டன் விஜய்காந்த் தான் என்பது குறிப்பிடதக்கது.

இன்றும் பெயர் சொல்லும் அளவிற்க்கு இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணம் கேப்டன் விஜய்காந்த். 1989ல் வெளியான மனக்கணக்கு திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

கேப்டனின் சினிமா பயணம்.. விஜயகாந்த் கைகொடுத்து தூக்கிவிட்டு பிரபலங்களும், சாதனைகளும்.. | Vijayakanth Records In Tamil Cinema

அதேபோல 1985 ல் விஜய்காந்த் மற்றும் நளினி நடிப்பில் வெளியான அன்னை பூமி என்னும் திரைப்படம் முதன் முதலில் தமிழ் திரை உலகில் 3D தொழில்நுட்பத்தை கொண்டு வெளியிட்ட திரைப்படம் என்பது முக்கியமான ஒரு தகவல் ஆகும்.

இதே போல் சரத்குமார், சமுத்திரக்கனி, தளபதி விஜய் போன்ற பல நட்சத்திரங்களின் வளர்ச்சிக்கும் விஜயகாந்த் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US