நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?- ஆனால் இப்படியொரு சோகமா?
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் சினிமா மக்களுக்கு கடும் துக்கத்தை ஏற்படுத்திய விஷயமாக இருக்கிறது.
கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்த விஜயகாந்த் உடல் மக்களின் கண்ணீர் மழையில் அடக்கம் செய்யப்பட்டது.
அன்று முதல் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றவர்களுக்கு செய்த உதவிகள் குறித்து பேட்டிகள் கொடுத்து வந்தனர், நமது சினிஉலகம் பக்கத்திலும் பிரபலங்கள் கேப்டன் குறித்து நிறைய விஷயங்கள் கூறினர்.
சினிமா துரையில் உச்சத்தில் இருந்தபோது இளம் நடிகர்கள் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். ஆனால் அவரது மகனின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை என்பது தான் உண்மை.
சண்முக பாண்டியன்
2015ம் ஆண்டு சுரேந்தர் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார், இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார், ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அடுத்து தமிழன் என்று சொல். தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜயகாந்த் தனது மகனுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது, ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மதுரவீரன், இந்த படத்திலும் சண்முக பாண்டியன் நடிக்க கமிட்டானார், ஆனால் படம் வந்த சுவடு தெரியாமல் போனது.
அடுத்து படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை அன்பு தான் இயக்குகிறார். முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
