மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டில் விரைவில் விசேஷம்.. என்ன தெரியுமா?
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமா பிரபலங்கள் என்ந லிஸ்ட் எடுத்தால் முக்கிய பங்கு வகிப்பவர்.
இவர் வந்த பிறகு நடிகர் சங்க கடனை நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஒட்டுமொத்த பிரபலங்களை ஒரே மேடையில் வர வைத்து சாதனை செய்திருந்தார்.
அது மிகப்பெரிய விஷயம், விஜயகாந்த் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது என பாராட்டுபவர்கள் பலர்.
கேப்டன் அவர்கள் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவரது நினைவு நாளில் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் நடந்தன.
விசேஷம்
இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டில் விரைவில் விசேஷம் நடக்கப்போகிறது.
அதாவது விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்க உள்ளதாம். ஏற்கெனவே அவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது திருமணம் பற்றிய தகவல் உலா வருகிறது.
விரைவில் எப்போது திருமணம் என்ற தகவல் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.