இரும்பு ராடுடன் சண்டைக்கு சென்ற விஜயகாந்த்.. பயந்து ஓடிய நிஜ ரவுடிகள்

By Parthiban.A Dec 29, 2023 02:16 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த் சினமா துறையில் தைரியமாக பல்வேறு விஷயங்களைசெய்தவர். ஹீரோவுக்கு கிடைக்கும் உணவு தான் செட்டில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என கூறி எல்லோருக்கும் உணவு கொடுத்தவர் விஜயகாந்த்.

நடிகர் சங்க தலைவராக இருந்த போது நிகழ்ச்சிகள் நடத்தி சங்கத்தின் கடனை அடைந்தவர். மேலும் அரசியலிலும் பல்வேறு விஷயங்களை செய்து இருக்கிறார் அவர்.

இரும்பு ராடுடன் சண்டைக்கு சென்ற விஜயகாந்த்.. பயந்து ஓடிய நிஜ ரவுடிகள் | Vijayakanth Went To Fights With Iron Rod In Mysore

மறைந்த நடிகர் விஜயகாந்த் எத்தனை கோடி கொடுத்தாலும் செய்யாத ஒரு விஷயம்

மறைந்த நடிகர் விஜயகாந்த் எத்தனை கோடி கொடுத்தாலும் செய்யாத ஒரு விஷயம்

இரும்பு ராடுடன் சண்டைக்கு சென்ற கேப்டன்

நடிகர் விஜயகாந்த் மைசூரில் தமிழ்ச்செல்வன் என்ற படத்திற்காக ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் சில ரௌடிகள் உடன் விஜயகாந்த் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் முன் வந்து பிரச்சனை செய்து இருக்கின்றனர்.

படத்தில் கிளாப்போர்டு தமிழில் இருக்கிறது என சொல்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

அப்போது நடிகர் விஜயகாந்த் இரும்பு ராடை கையில் எடுத்துக்கொண்டு நேராக அவர்களிடம் சண்டைக்கு சென்று இருக்கிறார். 'நீ என்ன பெரிய ஆளா.. வாடா பாக்கலாம்' என விஜயகாந்த் நேராக சென்று சத்தம் போட, அங்கு இருந்த வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ரௌடிகள் தெறித்து ஓடிவிட்டார்களாம்.

இந்த விஷயத்தை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவே சில மாதங்களுக்கு முன்பு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இரும்பு ராடுடன் சண்டைக்கு சென்ற விஜயகாந்த்.. பயந்து ஓடிய நிஜ ரவுடிகள் | Vijayakanth Went To Fights With Iron Rod In Mysore

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US