"எனது ரசிகர்கள் மாஸ்டர் பாருங்கள், விஜய் அண்ணன் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்" - நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கை இதோ..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் STR-ன் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு மிக பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் திரைப்படம் ஈஸ்வரன் குறித்தும், மாஸ்டர் படம் உருவாகி ஒரு வருடமாகியும் OTT யில் வெளியிடாமல், திரையரங்கில் வெளியிட விஜய் முடிவெடுத்துள்ளது பற்றியும் பாராட்டியுள்ளார் சிம்பு.
மேலும் " எனது ரசிகர்கள் மாஸ்டர் பாருங்கள், விஜய் அண்ணன் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்" - என அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி வரும் தமிழ் புத்தாண்டிற்குள் 100% இருக்கைகளுடன் திரையரங்கிற்கு அனுமதி அளிக்குமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Master #Eeswaran #SpreadLove ?? pic.twitter.com/g6SOq1a1uE
— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021