நடிகர்கள் ரஜினி மற்றும் விஜயகாந்த் உடன் தளபதி விஜய்யின் அப்பா..! பலரும் பார்த்திராத புகைப்படம்.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரின் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி அவரை அறிமுகம் செய்தவர் S.A.சந்திரசேகர், இவர் அப்போது முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் SAC குறிப்பாக விஜயகாந்த், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என பல திரைப்படங்கள் பெரிய ஹிட்டாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது இயக்குனர் S.A.சந்திரசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கேப்டன் விஜயகாந்த் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.