பிரபல டிவி சீரியலில் தளபதி விஜய்யின் பாட்டு! குடும்பத்துடன் பலரும் கொண்டாடும் அந்த பாடல்!
டிவி சீரியல்கள் இப்போதெல்லாம் சினிமா படங்கள் போல வடிவமைக்கப்பட்டு வருகின்றன. காதல், ரொமான்ஸ், செண்டிமெண்ட், சண்டை, சினிமா பாடல்கள் என பல மசாலாக்கள் தாங்கி வருகின்றன.
அவை மக்களையும் ஈர்த்து விடுகின்றன. சீரியல்கள் தொலைக்காட்சிகளுக்கான TRP ல் அதிகம் போட்டியிடுகின்றன. வாரம் ஒரு முறை இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்கிறது.
அண்மையில் பல சீரியல்கள் புதியதாக டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இடம் பெற்றுள்ளது.
இதில் விஜய், ஷாலினி நடிப்பில் வெளியாகி பலரையும் கவர்ந்த காதலுக்கு மரியாதை படத்திலிருந்து ஆனந்த குயிலின் பாட்டு என்ற பாடலின் பின்னணி இசை இடம் பெற்றுள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
எழிலே.. நீ பொழச்சிப்ப! ?
— Vijay Television (@vijaytelevision) December 31, 2020
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/gKAAvIF7XB