நடிப்பதை விட்டுவிட்டு அரசியல் களத்தில் இறங்கிய விஜய் பட நடிகை! ஓட்டு கேட்பது யாருக்காக தெரியுமா?
விஜய் அரசியலுக்கு வருவார் என பல காலமாக பேசப்பட்டது வந்த நிலையில் அவரின் அப்பாவான இயக்குனர் சந்திரசேகர் விஜய் நற்பணி இயக்கத்தினரை கொண்டு கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பின் சர்ச்சையானது.
விஜய் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என கூறி அதிரடி அறிக்கை வெளியிட்டதோடு நற்பணி இயக்க நிர்வாகிகளை புதியதாக நியமித்தார்.
விஜய்யின் படங்களில் அரசியல் தாக்கங்கள் இருந்து வருவது அவருக்கே உரித்தான ஸ்டைல். அப்படி சில விசயங்கள் பெரியளவில் அரசியல் வட்டார அழுத்தங்களையும் சந்தித்துள்ளது என்பதை மறக்க முடியாது.
விஜய்யையும், விஜய் ரசிகர்களையும் அரசியலுக்கு வரவேற்க நடிகர் கமல் ஹாசன் தயங்கியதில்லை. தற்போது மாற்றம் வேண்டும் என்பதற்காக அவர் போராடி வருகிறார். வரும் சட்ட மன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக சென்னை விருகம்பாக்கத்தில் வீடு விடாக சென்று பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்டுவருகிறாராம் நடிகை நான்சி. இவர் வேறு யாருமல்ல கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜெனிஃபர் வேடத்தில் நடித்தவர் தான்.
கமலின் ரசிகை என்பது மட்டுமில்லாமல் நடிக்காமல் மக்களுக்காக வேலை செய்து வரும் அவரை வலுவை ஆதரிப்பதாக நான்சி கூறியுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri