மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவின் மனைவி.. எந்த சூப்பர் ஹிட் சீரியலில் தெரியுமா.. இதோ
நடிகர் விஜய்யுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தவர் தான் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்.
இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் சஞ்சீவ் சின்னத்திரை நடிகையான ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளனர். கடந்த 6 வருடமாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் நடிகை ப்ரீத்தி.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் ஒன்றில் ரீ என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
இதனை சன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
6 வருஷத்துக்கு அப்புறம் "ப்ரீத்தி சஞ்சீவ்" நான் திரும்ப வரேன்! எந்த சீரியல் சொல்லுங்க பார்ப்போம்??#SunTV #SerialsOnSunTV pic.twitter.com/23FAAU4FVe
— Sun TV (@SunTV) January 9, 2021