ஹிந்தியிலும் ரீமேக் ஆகும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், வெளியான செம்ம மாஸ் தகவல்...
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
மேலும் இப்படத்தை Endemol Shine India, Cine 1 Studios, 7 Screens உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
IT'S OFFICIAL... #MASTER #HINDI REMAKE... #Master - starring #Vijay and #VijaySethupathi - will now be remade in #Hindi... Endemol Shine India, Murad Khetani [Cine1 and 7 Screen Studio will produce the #Hindi adaptation... Casting for #Hindi remake will commence soon. pic.twitter.com/K0L5tWtg9r
— taran adarsh (@taran_adarsh) January 15, 2021