விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் என்று, எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?- வெளிவந்த தகவல்
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியானது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு வெளியான பெரிய நடிகரின் படம்.
தளபதி படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் அலைமோதினார்கள். படமும் வசூலில் ரூ. 250 கோடிக்கு வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்தது.
திரையரங்கில் வெளியான சில வாரங்கள் கழித்து OTT தளத்தில் வெளியாகி இருந்தது. அங்கேயும் படத்திற்கு அமோக வரவேற்பு தான்.
இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாகிறது என்று செய்தி வந்தது.
இதுவரை எப்போது என்று தகவல் வெளியாகாத நிலையில் முழு விவரம் வந்துள்ளது. வரும் தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறதாம்.