ஒரே வருடத்தில் 3 திரைப்படங்கள் ரிலீஸ்..! தளபதி விஜய் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் தொடங்க உள்ளனர், மேலும் இப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் தளபதி 66 படத்தை இந்த வருட இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், அப்படம் 2022 கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அந்த ஏப்ரல் மாதத்திலே தளபதி 67 படத்தை விஜய் தொடங்கவுதாகவும், அப்படத்தை 2022 கிறிஸ்துமஸ் அல்லது 2023 பொங்கலில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தளபதி விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்களை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், AGS, லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ், தேனாண்டாள் பிலிம்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரிக்க தயாராகவுள்ளனர்.