விஜய்யின் சுறா படம் ஒரு கன்றாவி.. கடும் வார்த்தையில் திட்டிதீற்கும் படத்தின் தயாரிப்பாளர்
தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் விஜய்யின் 50வது திரைப்படம் சுறா. பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், பெரிதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை என்பது தான் இதுவரை கூறப்பட்டு வரும் செய்தி. இந்நிலையில் சுறா படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், சுறா படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் பேசிய சங்கிலி முருகன் " அது ஒரு கன்றாவி சுறா " என சுருக்கமாக கடும் வார்த்தையை பயன்படுத்தி கூறியுள்ளார்.
இதன் மூலம் சுறா திரைப்படம் எவ்வளவு பெரிய தோல்வியை தயாரிப்பாளருக்கு தந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.