மாறனை கொலை செய்ய சொல்லும் விஜி.. நொடிக்கு நொடி பரபரப்பு! வீரா சீரியல் ப்ரோமோ
வீரா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. அண்ணன் இழந்த தங்கைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆரம்பமான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சீரியலின் தற்போதைய கதைக்களம்படி, பழிவாங்குவதற்காக வீட்டிற்குள் வந்துள்ள விஜியை மாறன் மற்றும் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்துவிட்டனர். அவளை வீட்டை விட்டு வெளியேற்றும் நேரத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் கார்த்திக் தான் என சொல்லி நாடகம் ஆடிவிட்டால்.
ப்ரோமோ
இதனால் அவளை வீட்டிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. விஜியின் இந்த நாடகத்தை ராமசந்திரன் நம்பிவிட்டாலும், மாறன் மற்றும் வீரா நம்பவில்லை. இதனால் விஜியை மருத்துவ சோதனை செய்து, அவள் கர்ப்பமாக இருக்கிறாளா இல்லையா என தெரிந்துகொள்ள திட்டம் போடுகிறார்கள்.
இதில் விஜி கர்ப்பமாக இல்லை என மருத்துவ ரிப்போர்ட் கிடைத்துவிட்டது. ஆனால், மருத்துவமனையில் இருந்து கிளம்பும் மாறன் வீட்டிற்கு வரக்கூடாது என அடியாட்களிடம் கூறி கொலை செய்ய சொல்கிறார் விஜி.
இதிலிருந்து மாறன் எப்படி தப்பிக்க போகிறார், உண்மையை எப்படி வெளிக்கொண்டு வர போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ இதோ..