பிரபல நடிகருடன் புல்லட்டில் சென்ற நடிகர் விக்ரம், வெளியான அன்ஸீன் புகைப்படம்
தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளவர் சீயான் விக்ரம், இவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் கோப்ரா.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம் சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.
மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்ரம் உடன் பிரபல நடிகர் ஸ்ரீமன் புல்லட்டில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.
மேலும் இந்த புகைப்படம் கடந்த 2018-ல் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது, இதோ அந்த புகைப்படம்.
