இனி இவர்தான் புது செழியன்: போட்டோவுடன் வந்த பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற ரோலில் நடித்து வந்த நடிகர் ஆர்யன் சமீபத்தில் திடீரென வெளியேறிவிட்டார் என்கிற தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ஆர்யன் சமீபத்தில் தான் செம்பருத்தி நடிகை ஷபானாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
ஷபானா தற்போது நடித்து வரும் நிலையில் ஆர்யன் ஏன் வெளியேறினார் என்கிற கேள்வியை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாக்யலட்சுமியில் புது செழியன் யார் என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜபார்வை, முள்ளும் மலரும் போன்ற தொடர்களில் இதற்கு முன்பு நடித்து இருக்கும் நடிகர் விகாஷ் சம்பத் என்பவர் தான் புது செழியன் ஆக நடிக்கிறார்.
அவர் செழியன் ரோலுக்கு பொருந்துவாரா, ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது போகபோகத்தான் தெரியும்.