நடிகர் விக்ரம் படம் இயக்கினால் இந்த ஹீரோவை தான் முதலில் இயக்குவாரா?- அவரே கூறிய தகவல்

actor bala direction vikram
By Yathrika Jan 29, 2022 03:50 PM GMT
Report

நடிகர் விக்ரம் தனது நடிப்பின் மூலம் எப்போதும் மக்களை வியக்க வைத்துக் கொண்டே இருப்பார். படத்துக்கு படம் கதைக்காக பல கஷ்டங்களை அனுபவித்து நடிப்பார்.

சமீபத்தில் அந்தியன் படத்தின் அம்பி-அந்நியன் காட்சியில் விக்ரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்தார் என்று ஷங்கர் கூறிய வீடியோ மிகவும் வைரலானது. 

அம்பி வேடம் வந்தால் உடனே தண்ணீரை அதிகம் குடித்து தொப்பை இருப்பது போல் காட்டினாராம். அந்நியன் காட்சி வரும்போது ஒர்க் அவுட் செய்து நடிப்பாராம். இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் மாற்றி மாற்றி தண்ணீர் குடித்தும், ஒர்க் அவுட் செய்தும் நடித்துள்ளார்.

இப்படி ஒரு கதைக்காக கஷ்டப்பட்டு நடிக்கும் விக்ரம் படம் இயக்கினால் எப்படி இருக்கும். அவரும் ஒரு பேட்டியில், தான் முதலில் படம் இயக்கினால் பாலாவை வைத்து தான் இயக்குவேன் என்று கூறிய அவர் பின் ஆங்கிலத்தில் The Dirty Dozen என்ற ஒரு படம் இருக்கிறது.

படம் முழுவதும் 12 பேர் ஹீரோயிஸம் செய்வார்கள். அந்த மாதிரி கோலிவுட்டில் 12 ஹீரோக்களை நடிக்க வைத்து ஒரு படம் இயக்கினா எப்படி இருக்கும், அது ஒரு ஆசை என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US