ஹார்ட் அட்டாக் வதந்திகள் பற்றி மேடையில் பேசிய சீயான் விக்ரம்! வீடியோ
நடிகர் விக்ரம் கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதனால் அவர் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்ரம் இன்று நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் மேடையில் தனது உடல்நிலை பற்றி வந்த வதந்திகள் பற்றியும் பேசி இருக்கிறார்.
"ஹார்ட் அட்டாக், என்னாச்சு விக்ரமுக்கு என பல செய்தி வந்தது. சிலர் எதோ ஒரு பேஷண்ட் உடலில் என் முகத்தை வைத்து ரொம்ப கிரியேட்டிவ் ஆக வீடியோ போட்டிருந்தார்கள். நன்றாக இருந்தது. என்னென்னமோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை" என விக்ரம் மேடையில் பேசி இருக்கிறார். வீடியோ இதோ
#ChiyaanVikram about the rumours about him..?#CobraAudioLaunch #Cobrapic.twitter.com/7GQ08WD5Ry
— Laxmi Kanth (@iammoviebuff007) July 11, 2022