துருவ்வை அடித்த அப்பா விக்ரம்.. மெர்சலாயிட்டேன் பாடலால் மாட்டிக்கொண்ட துருவ்
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. அவர் அதன் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
அவருடன் அனுபமா, ரஜிஸா விஜயன் ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பாடலின் மியுசிக் ஒலிபரப்பப்படும், அது என்ன பாடல் என முதலில் சென்று பட்டன் அழுத்தி சொல்ல வேண்டும்.

மெர்சலாயிட்டேன்
அப்போது ஐ படத்தில் வரும் மெர்சலாயிட்டேன் பாடல் வந்தது. அந்த பாடலால் தான் அப்பா விக்ரமிடம் அடி வாங்கிய கதையை துருவ் கூறினார்.
"ஐ படத்தின் ஷூட்டிங் நேரத்தில் மெர்சலாயிட்டேன் பாடல் இருக்கும் பென்டிரைவ் என் கையில் கிடைத்தது. கெத்து காட்டலாம் என எடுத்துச்சென்று பள்ளியில் மெர்சலாயிட்டேன் பாடலை போட்டு காட்டிவிட்டேன்."
"ஷங்கர் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட், நான் பாடலை இப்படி லீக் செய்ததை என் அக்கா அப்பாவிடம் சொல்லவியிட்டார். அதனால் அப்பா என் முதுகிலேயே ஒன்று வைத்தார்" என துருவ் கூறி இருந்தார்.
ஜிம்பாய் லுக்கிற்காக விக்ரம் அப்போது அப்பா உடலை ஏற்றி இருந்தார். அவர் என்னை அடித்த மார்க் ஒருவாரம் என் முதுகில் இருந்தது எனவும் துருவ் கூறியுள்ளார்.
Dhruv breaks a Secret😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 19, 2025
pic.twitter.com/Kx3kHitGcb
திமுக மீது விமர்சனம் இருந்தாலும் கூட்டணியில் தொடர காரணம் இதுதான் - திருமாவளவன் விளக்கம் IBC Tamilnadu
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri