இந்த இடத்தில் ராஜமௌலி RRR படத்தை முந்தியது கமலின் விக்ரம் திரைப்படம் ! ஏங்கு தெரியுமா?
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் அப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது, மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த நிலையில் அதனை முறியடித்து No.1 ஆகியுள்ளது விக்ரம்.
மேலும் தற்போது ரஜினி 2.0 திரைப்படத்திற்கு பிறகு கமலின் விக்ரம் திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே UAE-GCC இடங்களில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரம் திரைப்படம் $ 5.05M வசூலை குவித்து RRR $ 4.72 M படத்தை முந்தியுள்ளது. மேலும் விக்ரம் படத்தை விட அதிகமாக அங்கு பாகுபலி 2, கே.ஜி.எப் 2, லூசிபர் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

அச்சு அசல் நடிகை சமந்தா போலவே இருக்கும் நபர் ! ரசிகர்களை அச்சர்யத்தில் ஆழ்த்திய புகைப்படம்..