தெலுங்கில் மட்டும் விக்ரம் திரைப்படம் இத்தனை கோடி வசூலா ! பிளாக் பஸ்டர் என அறிவிப்பு..
வசூலை குவிக்கும் விக்ரம் திரைப்படம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துள்ளது.
உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் வரும் நாட்களில் ரூ. 300 கோடியை படத்தின் வசூல் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பிளாக் பஸ்டர் வெற்றி
இந்நிலையில் விக்ரம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ள வசூல் சாதனை குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விக்ரம் தற்போது வரை தெலுங்கில் மட்டும் ரூ. 25+ கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம். இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

நேற்று நடந்த ஏ. ஆர். ரகுமான் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்ட அஜித்தின் குடும்பம் !