விக்ரம் - தோனி சந்திப்பின் போது இருவரும் இவரை பற்றி தான் பேசிக்கொண்டார்களாம் !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் தான் காமிட்டாகியிருந்த கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை முடித்துள்ளார்.
மேலும் தற்போது அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ள மகான் திரைப்படமும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே நேற்று சீயான் விக்ரம்-யை தோனி சந்தித்துள்ளார், அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே செம வைரலானது.
நுங்கம்பாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்தான் தோனி - விக்ரம் சந்திப்பு நடந்துள்ளது. ஏற்கெனவே விக்ரம் ஹோட்டலில் இருந்த விக்ரம் தோனியை பார்த்ததும் 'ஹாய்' என கூறி சந்தித்துக்கொண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் 15 நிமிடம் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது விக்ரம் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ள விஷயத்தை தோனியிடம் கூறியுள்ளார். பின் தோனி இர்பான் நடிப்பு குறித்தும் கேட்டு அறிந்திருக்கிறார்.