இன்ஸ்டாகிராமில் சியான் விக்ரம் ஃபாலோ செய்யும் அந்த ஒரே நபர்.. யார் தெரியுமா?
விக்ரம்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சியான் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு கதைக்கு என்ன தேவையோ, அதை செய்வார்.
இதற்கு உதாரணமாக இவர் நடிப்பில் வெளிவந்த அந்நியன், ஐ, தங்கலான் ஆகிய படங்களை கூறலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன்.
இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
யார் தெரியுமா?
இந்நிலையில், விக்ரம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஃபாலோ செய்கிறார். ஆம் அது தன் மகன் துருவ் விக்ரமை மட்டும் தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்.

லண்டனில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி வழக்கு: குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
