20 வருட பகையை மறந்து படுத்த படுக்கையாக இருப்பவருக்கு உதவிய விக்ரம்
விக்ரம்
நடிகர் விக்ரம் சினிமா துறையில் அவரது நடிப்பு திறமைக்காக பெயர்பெற்றவர். முதல் படம் முதல் தற்போது வரை அவரது அனைத்து படங்களிலும் வியந்து பார்க்கும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் பல விஷயங்களை செய்து இருப்பார்.
அவர் நடித்த பிதாமகன், சேது உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. பிதாமகன் ரிலீஸ் நேரத்தில் அவர் விக்ரமுக்கு 25 லட்சம் ருபாய் சம்பளம் தராமல் ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்து அந்த பஞ்சாயத்து நீண்ட காலம் நடந்தது.
பகையை மறந்து உதவிய விக்ரம்
இந்நிலையில் தற்போது வி.ஏ.துரை சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இருந்து வந்தார். அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்தனர்.
தற்போது சக்கரை நோயால் அவரது ஓரு கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது செயற்கை கால் பொறுத்த பணம் இல்லாமல் அவர் இருந்திருக்கிறார்.
அது பற்றி அறிந்து விக்ரம் தான் அவருக்கு உதவி செய்திருக்கிறார். பகையை மறந்து விக்ரம் செய்த உதவியை பார்த்து வி.ஏ.துரை கண்கலங்கி நன்றி கூறினாராம்.
பெரியவர் ரஜினி அப்படி சொல்லல.. விஜய் சாதாரண ஆள் இல்லை: மிஷ்கின்