ஒரே ஒரு சாதனை தான் பாக்கி.. பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் விக்ரம்
தற்போது விக்ரம் படம் தான் கோலிவுட்டில் லேட்டஸ்ட் ஹிட். இந்த வருடம் வெளிவந்த விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை பின்னுக்கு தள்ளி விக்ரம் படம் நல்ல வசூல் முதல் நாளில் இருந்தே ஈட்டி வருகிறது.
படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருப்பதால் கமல் அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார். மேலும் கமல்ஹாசனுக்கு நேற்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி விருந்து அளித்து வாழ்த்து கூறி இருக்கிறார். அப்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் இருந்தார்.

பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து வசூல் சாதனைகள் படைத்தது வரும் விக்ரம் படம் தற்போது UAE-GCC பகுதியில் கபாலி படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. கபாலி படம் $3.10 Million அங்கு வசூலித்து இருந்தது.
மேலும் முதலிடத்தில் இருக்கும் 2.0 படத்தை தொட $4.19Million வசூலிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vikram Is Now Second Highest Kollywood Grosser IN UAE-GCC By Beating #Kabali $3.10Million & Highest Tamil (SL) Language Grosser Of All Time.
— Jaseel Muhammed (@JaseelMhd_GOAT) June 12, 2022
Only Behind #2Point0 $4.19Million (All Language) pic.twitter.com/cytB6iHqpF