விக்ரம் படத்தின் முதல் நாள் உண்மையான காலெக்ஷன் ! தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடியா ?
விக்ரம் படத்தின் தமிழ்நாடு வசூல்
உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்புக்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்ப்பார்த்து இருந்தது.
ஆனால் விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக விக்ரம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பெரிய ஒப்பனிங்கை பெற்றுள்ள விக்ரம் படத்தின் முதல் நாள் மொத்த காலெஷன் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.
ஆம், அதன்படி விக்ரம் திரைப்படம் முதல் நாள் தமிழ் நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ 23.27 கோடியை வசூல் செய்து இருக்கிறது. பிஸ்ட, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அடுத்த படியாக தற்போது விக்ரம் திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்திருக்கிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் இப்படி விஷயம் செய்யவுள்ளார்களா?