கமல் ஹாசனுக்கு விஜய் சேதுபதி வில்லனா? அவரே கூறிய தகவல்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் கைதி, மாஸ்டர் என இரு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் தற்போது கமல் ஹாசன் நடிக்க விக்ரம் எனும் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, " இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் " என கூறியுள்ளாராம்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan