விடாமுயற்சியை அடுத்து மகிழ்திருமேனியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட்
விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விக்ரம் அடுத்து அருண்குமார் இயக்கத்தில் அவரது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்கள் ஆக எடுக்கப்படும் இப்படத்தில் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளிவரும் அதன் பின், முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், அடுத்து விக்ரம் நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, விக்ரம் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி வரும் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
