உலகளவில் 300 கோடியை நெருங்கும் விக்ரம் காலெக்ஷன் ! எத்தனை கோடி தெரியுமா?
300 கோடியை நெருங்கும் விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷின் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இன்னும் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலை மோதி வரும் விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரை மொத்தமாக ரூ. 275+ கோடிகள் வசூல் செய்துள்ளதாம்.

தலைவர் 169 படத்தின் டைட்டில் இது தானா! இணையத்தில் கசிந்த தகவல்..