பிக்பாஸ் பாணியில் வெளியான விக்ரம் படத்தின் ப்ரோமோ ! எப்போது OTT-ல் ரீலிஸ் தெரியுமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.
அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரையில் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது. ரஜினியின் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் பட்டிலலில் தற்போது விக்ரம் திரைப்படம் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
விக்ரம் திரைப்படம் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வெற்றியடைய காரணமாக இருந்ததே கமல் அப்படத்திற்காக செய்த ப்ரோமோஷன் தான். அப்படம் வெளியாகும் முன் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சென்று ப்ரோமோஷன் மேற்க்கொண்டார்.
இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் OTT ரீலிஸுக்கு கூட ப்ரோமோஷனில் இறங்கியுள்ளார் கமல். வரும் ஜூலை 18 ஆம் தேதி விக்ரம் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது இதன் அறிவிப்பிற்காக கமல் விக்ரம் பட பாணியில் ப்ரோமோவில் வந்துள்ளார்.
இதோ அந்த மாஸ் ப்ரோமோ
நாயகன் மீண்டும் வரார்.. ?? #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri
